நரி. குள்ள நரி, ஆளுமையின் சுவை தெரிந்து விலகிக் கொண்டு, அதே சமயம் ஆளுமைக்கு ஆசைப்படுகிற நரி. இரவு முழுவதும் ஊளையிடுகிற நரி. எதற்கு ஊளையிடு கிறாய் நரியே என்று மான் கேட்டால், சிங்கத்தின் வருகையை உனக்குச் சொல்ல என்று பதில் சொல்லுமாம். எதற்கு ஊளை என்று சிங்கம் கேட்டால், மான் இருக்கும் இடத்தை உனக்குத் தெரிவிக்க என்று விடை கொடுக்கு மாம்.

