மனசே வாழ்க்கை. எதை நினைக்கிறோமோ அதுவாக மாறுகிறோம். தொலைநோக்கு உள்ளவனுக்குத் துயர மில்லை. வரும் துயரமும் நீடிப்பதில்லை.... அடி விழாத வாழ்க்கை எவருக்குண்டு. வலியிலிருந்து மீள ஆசைப்படுபவனுக்கே வலியைத் துடைத்துக் கொள்ளத் தெரியும். வலியே சுகமாகிப் போனவனுக்குத்தான், புலம்பலே பேச்சாகிப் போனவனுக்குத்தான் துயரம் தொடர்கதை.

