வாழ்க்கை நாடகம் தான். எல்லாரும் எங்கோ ஓரிடத் தில் நடிக்கவேண்டியிருக்கிறது என்பது உண்மைதான். ஒரு சபை உன்னிப்பாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது என்கிற உணர்வு நடிகனுக்கு அவசியம். அந்த உணர்வுக்குப் பெயர்தான் மெண்டல் பேலன்ஸ். சபையின் நாடித் துடிப்பை உணர்ந்தபடியே நடிப்பவன்தான் சிறக்க முடியும்.

