எவளுக்கோ தாலி கட்டின கை, எவரையோ கும்பிட்ட கை, எதற்கோ கரகோஷம் செய்த கை, எந்தக் குழந்தையையோ தடவி இறுக்கிய கை, அநாதை யாய் மண் புழுதியில் கிடக்கிறது. சற்றுமுன் இது சட்டைப் பித்தான் போட்டிருக்கும், தலை சீவியிருக்கும். முகம் அலம்பியிருக்கும். வேட்டி வரிந்து கட்டியிருக்கும், இப் போது வானம் பார்த்துக் கிடக்கிறது. என்னால முடியாது இனி என்று விரிந்து கிடக்கிறது. மான அவமானமெல்லாம் பார்த்துப் பார்த்து பட்டுப் பட்டுத் தாங்க மாட்டாது தனியே பிரிந்து கிடக்கிறது.

