தலைவனைத் தொண்டனாகக் கூட எங்கேயும் சேர்க்க மாட்டார்கள். அரசனை அடிமையாய் யாரும் சேர்க்க மாட்டார்கள். ஒருநாள் இல்லையெனினும் ஒரு நாள் அடிமையாய்ச் சேர்ந்த அரசன் ஆளுமைக்கு வந்து விடலாம். சிங்கத்தைக் கூண்டில் அடைத்து வளர்த்தாலும் சீறும். சற்று பிடி நெகிழ சிதற அடிக்கும். வேலியில் அமர்ந்த ஓணானை விலைக்கு வாங்குவானேன்.

