சுத்தி வந்துக்கிட்டிருந்தா எந்தக் கவலையுமில்லை. எவனுக்கு வேணா அடிமையா மண்டி போட்டு இருந்துடலாம். மேல மேலன்னு போற வனுக்கு இடறத்தான் செய்யும். கை புடிச்ச பிடி நழுவி ரத்தம் வரும், சறுக்கின இடத்துலேர்ந்து நகரணும், பல்லைக் கடிச்சுக்கிட்டு மேல ஏறணும். மலையேறி நிக்கறதுதான் வாழ்க்கைன்னு வந்துட்டா சறுக்கலுக்குப் பயப்படக்கூடாது சரசு.''

