ஸிக் வண்டிகள் என்பது, தயாரித்தவுடனே தயாரிப்பில் கோளாறு கண்டுபிடிக்கப்பட்டு ஒதுக்கப்பட்ட வண்டிகள். ப்ரேக் சரியில்லை. வலது பக்க டயர் ஆடுகிறது, ஸ்டியரிங் திருப்புதல் கடினம், இன்ஜின் உயர்வேகத்தில் சலசலக்கிறது. கியர்கள் சிக்குகின்றன என்று பல்வேறு விதமான கோளாறுகளினால் ரிஜெக்டட் என்று சிவப்பு லேபிள் கட்டி ஓரமாய் நிற்க வைக்கப்பட்டிருக்கும். இவற்றை அஸெம்பிளி ஆட்கள் மறுபடி கவனித்து சீர்செய்து ஓட்டிக் காட்டிய பிறகே க்வாலிடி கண்ட்ரோல், மேலே கூடு செய்ய அனுப்பும். இதற்குப் பிறகே கூரையும் கதவும் சீட்டுகளும் கண்ணாடிகளும் பொருத்தப்பட்டு முழு வேனாக வெளியே வரும். அதுவரை வெறும் சேஸிஸ்... அதாவது, "ட்ரைவர் ஸீட்
...more

