கற்பு என்பது பெண்ணுக்குக் கைவிலங்காய் இருக்கலாம். தலையில் ஏற்றப்பட்ட சுமையாய் இருக்கலாம், ஆனால் அதைக் களவாட எவனும் முற்படின், தலைச் சுமையில் கை வைக்கத் துணிந்த பின் தரும் அடி தவறாது விழும். இங்கே பிராது சொன்னவளே பலமான சாட்சி, அவள் புலம்பல் பெரும் சாதகம். அவள் கண்ணீர் முக்கியமான வாக்கு மூலம். அவள் அபயக்குரல் கொடுக்க உடனே போர் மூளும்.

