"ஆத்திரம் ஆறாயிரம், ஏழாயிரம் சம்பாதிக்கணும்னு ஆத்திரம், ஒரு ஆளுக்கு அத்தினி காசு எதுக்குய்யா. வீடியோ பெட்டி, டி. வி. செட், சென்ட் பாட்டில், புடவை கொண்டாந்து கொட்டணுங்கற ஆத்திரம். ஏன், நூல் புடவை கட்டினா நிக்காதா. நம்மூர் டிவில படம் தெரியாதா. ஊர்ல கால் ஊன்றத்துக்கு கத்துக்கணும்யா ஒருத்தன்."

