More on this book
Kindle Notes & Highlights
பசுக்களை வளர்த்தேன். பால் வியாபாரம் செய்தேன். கோழிப்பண்ணை நடத்தினேன். பட்டுப் பூச்சி வளர்த்தேன். மோட்டார் சைக்கிள் டீலராக இருந்திருக்கிறேன். உடுப்பி ஹோட்டல் நடத்தியிருக்கிறேன். பங்குச் சந்தை தரகராக, நீர்ப்பாசனக் கருவி விற்பவராக, விவசாய ஆலோசகராக இருந்திருக்கிறேன். பி.ஜே.பி. சார்பில் தேர்தலில் போட்டியிட்டிருக்கிறேன். கடைசியாக, விமான நிறுவனத்தின் தலைவரானேன். போராட்டம்,
என் அம்மா வழித் தாத்தா சமஸ்கிருதத்தில் நல்ல புலமை மிகுந்தவர். புரோகிதராகவும் இருந்தார்.
காந்தி, தாகூர், சாக்ரடீஸ், பிளேட்டோ, எமர்ஸன், ஆலிவர் கோல்ட்ஸ்மித் எனத் தலைசிறந்தவர்களின் படைப்புகளை எனக்குப் படித்துக் காட்டுவார்.
எனக்கு நிறைய மாமாக்கள் உண்டு. ஹஸனில் இருந்த மாமா சம்ஸ்கிருத, கன்னட மொழிகளில் அறிஞர். மிகவும் ஆசாரமானவர். குடும்பமே அதிகாலை எழுந்து குளித்துவிட்டு பூஜை புனஸ்காரங்களில் ஈடுபடும். நான் போனபோதும் பூஜை நடந்தது.

