More on this book
Kindle Notes & Highlights
வாசிப்புத்தன்மை நிறைந்த எழுத்துக்கள். அடம் ஹஸ்லெட் என்று ஒருத்தர், மற்றவர் ஸ்டீபன் லீகொக். ஒருவர் புதியவர், மற்றவர் பழையவர். இவர்கள் தங்கள் பாண்டித்தியத்தை காட்டவோ, மேதாவிலாசத்தை வெளிப்படுத்தி வாசகரை அசத்தவோ எழுதுவதில்லை. பகிர்ந்துகொள்வதுதான் அவர்களுடைய முக்கியமான நோக்கம்.
மாணவர்களும், பச்சிளம் பாலகர்களும் வழுவழுப்பான வண்ண அட்டைகளை விசுக்கிக் காட்டினார்கள்.
நாங்கள் உடம்பினால் எழுதுபவர்கள். ஒரு மேடையில் உடம் பினால் எழுதுபவர்கள்.
பைத்தியக்காரத்தனமாக மாறும் உலகத்துக்கு நாங்கள் சொல்லும் செய்தி ஒன்றுதான். சகிப்புத்தன்மை, மென்மை.
எவ்வளவுக்கு ஒரு படைப்பு வாசகனுடைய பங்கீட்டைக் கேட்கிறதோ அவ்வளவுக்கு அந்தப் படைப்பு உயர்ந்து நிற்கிறது. ஓர் உன்னதமான இலக்கியம் உண்மையில் வாசகனாலேயே பூர்த்தி செய்யப்படுகிறது.

![அங்கே இப்ப என்ன நேரம்? [Angae Ippa Enna Neram?]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1521737220l/39347493._SX318_.jpg)