More on this book
Kindle Notes & Highlights
“கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!”
முறையா, தவறா என்பதெல்லாம் வல்லமையைப் பொறுத்து முடிவு செய்ய வேண்டிய விஷயம். கையில் துப்பாக்கி இருந்தால் காசில்லாமலே தோசை. இல்லாவிடின், காசு இருந்தாலும் சில சமயங்களில் தோசை மறைந்துவிடும்.
“பழம்பாடல்களில் விதந்தோதப்படும் தமிழ் வீரமெல்லாம் பெரும்பாலும் சில்லறைச் சச்சரவுகளைப் பற்றியவையே. காளையார்கோயில் வேங்கைமார்பனைப் பாண்டியன் வென்றதில் என்ன பெருமை இருக்கிறது? இருவரும் தமிழர்கள். ஓர் அரசன், சின்னஞ்சிறு கிராமத் தலைவன் ஒருவனை வீழ்த்தி, அவனுடைய சொத்து சுதந்திரங்களைப் பறித்துக்கொண்டான். இதிலென்ன பெருமை இருக்கிறது?”
Krishna liked this
கிணற்றுத் தவளைக்கு அமேஸான் ஆறு, பசிபிக் ஆழி, இமயமலை எல்லாமே அந்தக் கிணற்றுக்குள்தான்.”
அண்ட கோடி புகழ் காவை வாழும் அகிலாண்ட நாயகி அம்மை உம்மைக் கைவிட்டது ஏன்? மனம் குவியும் தந்திரம் உமக்குக் கைவரவில்லையா?
‘அகிலாண்ட கோடி ஈன்ற அன்னையாகிய பின்னையுங் கன்னி’யெனத் திரிவதால் அம்மைக்குப் பிள்ளைப்பாசம் அற்று விட்டதா...?
ஒவ்வொருவனும் அவனது இனத்தின் தொன்மையையும் சாதனைகளையும் எண்ணிப் பெருமை பாராட்டுவது குற்றமில்லை. ஆனால், அது உண்மையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
நம் தேசத்தில் முறைதுறை இல்லாத அரசர்களும், பச்சைக் கொள்ளைக்காரர்களும் தொடர்ச்சியாய் வெகுகாலம் ஆட்சி நடத்தி வந்ததால், சாதாரண மக்களின் தற்காப்புக் கூட்டுறவு ஏற்பாடாக ஜாதிப்பற்று தலைமுறைக்குத் தலைமுறை வலுப்பெற்று வந்துள்ளது.
தனியாகச் சென்று கோரினாலும், கூட்டமாகச் சென்று கோரினாலும் ஒரு மாதிரியான நீதியையே எதிர்பார்க்க முடியும் என்ற நிலைமை ஏற்படின், ஜாதிமுறையின் பிடிப்புத் தளர்ந்துவிடும்.
கால - இடத் தேவைகளுக்கேற்பச் சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது. மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது; இருந்து மாறியிருக்கிறது. எனவே, நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி.
எனக்குத் தெரிந்தவரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவுவளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு, ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யாவுமே வெறும் விளையாட்டு வேலிகள்...
வெகுகாலமாக எனக்கு ஓர் ஐயம்... வினைநவில் யானை விறற் போர் தொண்டையர்! மழைமருள் பல்தோல் மாவண் சோழர்! சேண்பரல் முரம்பின் ஈர்ம்படைக்கொங்கர்! ஒளிறு வாட்தானைக் கொற்றச் செழியர்! இவர்களின் கொடிவழியில் வந்தோரெல்லாம் இப்பொழுது எங்கே, என்ன செய்துகொண்டிருக்கிறார்கள்? பாண்: மலேயாவில் ரப்பர் வடிக்கிறார்கள். மாணி: இலங்கையில் தேயிலை கிள்ளுகிறார்கள். நாவ: பர்மாவில் மூட்டை தூக்குகிறார்கள். சாத்: கயானாவில் கரும்பு வெட்டுகிறார்கள். ஆடிட்: பாரத கண்டம் எங்கும் பரவிப் பிச்சை எடுக்கிறார்கள்.
“தேசியம் என்பது உணர்ச்சியடியாகப் பிறப்பது. மொழி, இன வேற்றுமைகளை மிகைப்படுத்துவது அதன் பிரதானக் கோட்பாடு.”
“வரம்பிலா அறிவுத் திறனும் புல்லறிவும் ஒன்றே. மடையனாக விரும்பாத அறிஞன் தானாகவே தனது அறிவுப் பரப்புக்கு ஒரு வேலி அமைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு ஏதோ ஒரு பெயர். திருவள்ளுவனுக்கு அறநெறி; மணிவாசகனுக்குப் பக்திநெறி; தாயுமானவனுக்குத் தவநெறி. நம்மைப் போன்ற நடப்பு மனிதர்களுக்குச் சான்றோர் வகுத்து வைத்திருக்கும் நன்னெறி.”
நான் ஊர்ப்பிராணி. பிரிந்து பிணங்கி வாழ்வது பிழை. இணைந்து இசைய வாழ்வதே முறை.

![புயலிலே ஒரு தோணி [Puyaliley Oru Thoni]](https://i.gr-assets.com/images/S/compressed.photo.goodreads.com/books/1663566112l/39088037._SY475_.jpg)