வெள்ளாம் முறிப்பிலிருந்த இரண்டு பள்ளர்கள் புதுக்குடியிருப்புக்குச் சென்று ஞானஸ்நானம் பெற்று வேதக்காரர்களாகிய போது வெள்ளாம் முறிப்பு வெள்ளாம் கமக்காரர்கள் அந்த இருவரையும் பிடித்து மாடுபோல அடித்து கலப்பையின் நுகத்தடியில் இருவரது கழுத்தையும் பிணைத்து, மாடுகளிற்குப் பதிலாக அவர்களைக்கொண்டு மூன்றுநாட்களாக வயல்களை உழுதார்கள்.

