இலங்கை அரசன் வாலசிங்கவுக்கும் மதுரை அரசன் சிங்ககேதுவின் புத்திரி சாதுமதிக்கும் திருமணம் நிச்சயமான போது சிங்ககேதுவின் ஆணையின்படி மதுரையிலிருந்து அறுபது வன்னியர்கள் இளவரசி சாதுமதி நாச்சியாரை அழைத்துக்கொண்டு கடலில் காற்றிலும் புயலிலும் பயணித்து இலங்கையை வந்தடைந்து வாலசிங்கவுக்கு சாதுமதி நாச்சியாரை விவாகம் செய்து கொடுத்தனர்.

