வரிசையாக உட்கார வைத்து இலையில், படைத்தவற்றை விருந்திடுவார்கள். அப்போது அவர்கள் எங்களை ‘அடிமைக் குட்டிகள்’ எனக் கூப்பிடுவார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவர்கள் துடைப்பங்களையும் விளக்குமாறுகளையும் செருப்புகளையும் தயாராக வைத்துக்கொள்வார்கள். நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் எங்களை விளக்குமாறுகளாலும் செருப்புகளாலும் துடைப்பங்களாலும் அடித்து வெளியே துரத்துவார்கள். நாங்களும் திரும்பியும் பார்க்காமல்

