Kindle Notes & Highlights
அப்படி எங்களைக் கொஞ்சியும் வருடியும் பேசும் வழக்கம் எங்கள் கிராமத்தில் இருந்ததாக எனக்கு ஞாபகமில்லை. நத்தார் ஒளிவிழாவன்று அழகிய மினுமினுப்பான
அதிகமும் இளையவனாகயிருந்த ஒருவன் இரண்டு தடவைகள் சந்தேகம் மேலிட யோபு அற்புதத்தையே
pour rien’ என்ற முழக்கம் ஆறுவருடங்களிற்குப் பின்பு மறுபடியும் பாரிஸ் நகரத்துத் தெருக்களிலும் சதுக்கங்களிலும் உக்கிரமாக வெடித்தது. died for nothing
ஒரு முரல் மீனின் இலாவகத்துடன் அவன் தண்ணீரைக் கிழித்து நீச்சலடித்தான்.
‘இங்கே பண்டார வன்னியன் கப்டன் வொன் ட்றிபேர்க்கால் தோற்கடிக்கப்பட்டான்’ என்ற நினைவுக் கல்லும் நாட்டப்பட்டது. அதனால்
அந்த இடம் பின்னர் கற்சிலைமடு என்றாயிற்று.
கார்த்திகைக் கிழங்கை அரைத்து விழுங்கிவிட்டுப் பச்சைப் பன்னாங்கில் படுத்து
கிராமத்து மக்கள் காணா மூலிகைகளிலிருந்து தயாரிக்கப்படும் ‘அமையான் தூள்’ எனப்படும் வீரியமான நஞ்சைத் தயாரிக்கும்
பள்ளன் குளம் மன்னாரில் இருக்கிறது. பறையனாலங்குளம், நளவாரிக்குளம், பிராமணன் குளம், வண்ணான்குளம், வேடர் மகிழங்குளம்,
வேட வேப்பங்குளம், நாவிதன் இறம்பைக்குளம், நாவிதன் ஈச்சங்குளம், பரிகாரிக்குளம், தவசியார் குளம், தவசிகூழான்குளம், தேவர்குளம், வண்ணான் புளியங்குளம், முதலியார்குளம், நளவர் வேப்பங்குளம், செட்டிகுளம், வெங்கலச் செட்டிகுளம், கொல்லன்குளம், பண்டாரிப்புதுக்குளம், பிரமணாலங்குளம், வண்ணான்கல்லு புளியகுளம், நாவிதன் இலுப்பைக்குளம், பண்டார இலுப்பைக்குளம், பரிகாரி பெரியகுளம், வெள்ளாம் முறிப்பு, கொல்லர் புளியகுளம், குருக்கள் குளம், பிராமண சின்னக்குளம், தச்சன்வில்குளம்,
வண்ணாவயல், வலைஞன்மடம், தச்சனடம்பன், உடையார் சம்மங்குளம், கரையாபாடு என்று பல ஊர்களிருக்கின்றன. ஒரு இலட்சம்பேர்கள் மரித்துப்போன முள்ளிவாய்க்கால் என்பது கூட ஒன்றல்ல. கரையா முள்ளிவாய்க்கால்...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
இலங்கை அரசன் வாலசிங்கவுக்கும் மதுரை அரசன் சிங்ககேதுவின் புத்திரி சாதுமதிக்கும் திருமணம் நிச்சயமான போது சிங்ககேதுவின் ஆணையின்படி மதுரையிலிருந்து அறுபது வன்னியர்கள் இளவரசி சாதுமதி நாச்சியாரை அழைத்துக்கொண்டு கடலில் காற்றிலும் புயலிலும் பயணித்து இலங்கையை வந்தடைந்து வாலசிங்கவுக்கு சாதுமதி நாச்சியாரை விவாகம் செய்து கொடுத்தனர்.
அறுபது வன்னியர்களும் தங்களது ஆட்சியை வன்னியில் திடப்படுத்திக்கொள்வதற்காக இந்தியாவிலிருந்து பல சாதிகளையும் தருவித்தபோது
குலதெய்வம் அண்ணமார் சுவாமி. முற்காலத்தில் இலங்கைக்குப் போரிட வந்த வன்னியர்கள் சிலரைத் தேடி
தேடி அவர்களது மனைவிகள் நூறு பள்ளர்களின் துணையோடு வன்னிக்கு வந்தார்கள். இலங்கை வந்ததும் தாங்கள் தேடிவந்த கணவர்கள் போரிலே இறந்துவிட்டார்கள் எனத் தெரிந்துகொண்ட வன்னிச்சிகள் தீ வளர்த்து அதில் விழுந்து இறந்தார்கள். அவர்களிற்குத் துணையாக வந்த நூறு பள்ளர்களும் கூடவே அந்தத் தீயில் வீழ்ந்து அண்ணமார் சுவாமிகளானார்கள்.
வெள்ளாம் முறிப்பிலிருந்த இரண்டு பள்ளர்கள் புதுக்குடியிருப்புக்குச் சென்று ஞானஸ்நானம் பெற்று வேதக்காரர்களாகிய போது வெள்ளாம் முறிப்பு வெள்ளாம் கமக்காரர்கள் அந்த இருவரையும் பிடித்து மாடுபோல அடித்து கலப்பையின் நுகத்தடியில் இருவரது கழுத்தையும் பிணைத்து, மாடுகளிற்குப் பதிலாக அவர்களைக்கொண்டு மூன்றுநாட்களாக வயல்களை உழுதார்கள்.
வரிசையாக உட்கார வைத்து இலையில், படைத்தவற்றை விருந்திடுவார்கள். அப்போது அவர்கள் எங்களை ‘அடிமைக் குட்டிகள்’ எனக் கூப்பிடுவார்கள். நாங்கள் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே அவர்கள் துடைப்பங்களையும் விளக்குமாறுகளையும் செருப்புகளையும் தயாராக வைத்துக்கொள்வார்கள். நாங்கள் சாப்பிட்டு முடித்ததும் அவர்கள் எங்களை விளக்குமாறுகளாலும் செருப்புகளாலும் துடைப்பங்களாலும் அடித்து வெளியே துரத்துவார்கள். நாங்களும் திரும்பியும் பார்க்காமல்
கமக்காரர்களின் குண்டியைக் கழுவிச் செருப்பால் அடிபட்டுச் சோறு தின்பதைவிட
அந்தப் பயணம் முள்வேலி முகாம்களை நோக்கிய வாதையும் ஓலமும் நிறைந்த நீண்ட பயணமாகயிருந்தது.
இருபத்தெட்டாம் கதை ஒரு செவ்வாய்க்கிழமை காலையில், பெரிய பள்ளன் குளத்தின் பெயரைக் கார்த்திகைக் குளம் என மாற்றவேண்டும் என்ற மனுவை எழுதி எடுத்துக்கொண்டு இளைஞர்கள் வெள்ளாம் முறிப்பிலிருந்த சந்திரசேகரம் விதானையின் வீட்டிற்குச் சென்றார்கள். விதானையின் வீடு பெரிய கல்வீடு. அந்த வீட்டின் ஒரு அறையில்தான் விதானையின் அலுவலகம் இருந்தது. சந்திரசேகரம் விதானை பெரிய பள்ளன் குளம் உட்பட மூன்று கிராமங்களிற்கு விதானையாகயிருந்தான்.
கொடுத்துக்கொண்டே “வந்த ஆக்களுக்குத் தேத்தண்ணி குடுக்காட்டி அவர் ஏசுவார்” என்றாள்.
இதுவரை உலகத்தில் நடந்த எந்த யுத்தத்தைப் பற்றிய வரலாறும் உண்மையாக, நடந்தது நடந்தபடியே எழுதப்பட்டதில்லை. அந்தப் பொதுவிதிக்கு இந்த யுத்தமும் விலக்கானதல்ல.”
அந்த மக்களிடம் துக்கமும் பற்கடிப்பும் இருப்பது போலவே, அந்தச் சனங்கள் தங்களது கிராமத்திலிருந்து வெளியேற
“இப்போது யுத்தம் முடிந்துவிட்டதுதானே இன்னும் ஏன் பிரான்ஸில் இருக்கிறீர்கள்... தாய்நாட்டுக்கு வந்துவிடுங்கள்.”

