வேவு இறக்கும் சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஒரு நாட்டுக்கூடை நிறைய அரிசியை வைத்து, அதன் உச்சியில் நாலைந்து கத்திரிக்காய்களை வைத்து, ஒருவர் தலையில் ஏற்றி, இன்னொருவர் இறக்குவார்கள். அதன் பொருள், ‘ஆயுள் முழுவதும் வறுமை வராமல் ஒருவரையொருவர் காப்பாற்றுவோம்’ என்பதாகும்.