சமுதாயத்தில் பண வசதியற்றவனுடைய நிலையை அவன் முழுக்க உணர்ந்தான். காரிலே வருபவர்கள் காரிலே வருபவர்களைத்தான் கட்டித் தழுவுகிறார்கள். மாடியில் நிற்பவன், மாடியில் நிற்பவனோடுதான் சொந்தம் கொண்டாடுகிறான். வெள்ளாடை உடுத்தவன், வெள்ளாடை உடுத்தவனைப்பற்றித் தான் விசாரிக்கிறான். இருப்பவன் வேறு, இல்லாதவன் வேறு என்பதை நகரத்தின் ஒவ்வொரு தெருவும் அவனுக்கு உணர்த்திற்று.
Jeevarathinam liked this