More on this book
Kindle Notes & Highlights
சமுதாயத்தில் பண வசதியற்றவனுடைய நிலையை அவன் முழுக்க உணர்ந்தான். காரிலே வருபவர்கள் காரிலே வருபவர்களைத்தான் கட்டித் தழுவுகிறார்கள். மாடியில் நிற்பவன், மாடியில் நிற்பவனோடுதான் சொந்தம் கொண்டாடுகிறான். வெள்ளாடை உடுத்தவன், வெள்ளாடை உடுத்தவனைப்பற்றித் தான் விசாரிக்கிறான். இருப்பவன் வேறு, இல்லாதவன் வேறு என்பதை நகரத்தின் ஒவ்வொரு தெருவும் அவனுக்கு உணர்த்திற்று.
Jeevarathinam liked this
ஆசைகளை அடக்கிக்கொண்டு விட்டதாகக் காட்டுக்கு ஓடுகிற வேதாந்தியும், தான் ஆசைகளை அடக்கிக் கொண்டவன் என்பதைப் பிறர் காண வேண்டுமென்று ஆசைப்படுகிறான்.
Jeevarathinam liked this
கடற்கரையில் தேங்காய், மாங்காய், பட்டாணி, சுண்டல் விற்றுக்கொண்டு வந்தார் ஒருவர். அழகான பட்டுப்பாவாடை கட்டியிருந்த ஒரு குழந்தை, அதைப் பார்த்துவிட்டு ‘அம்மா! அம்மா! பட்டாணி! பட்டாணி!’ என்று கத்திற்று. தன் ஆசையை அம்மாவிடம் குழந்தை தெரிவித்ததும், அந்தக் குழந்தையிடம் ஆசை வைத்திருந்த தகப்பனார், அதற்குப் பட்டாணி வாங்கிக் கொடுத்தார். அந்தப் பட்டாணியை அந்தக் குழந்தை தின்பதை, ஒரு பிச்சைக்காரக் குழந்தை பார்த்து ஆசையோடு கையை நீட்டிற்று. ‘சீ! போ, அந்தப் பக்கம்!’ என்ற கடுமையான குரல், தகப்பனாரிடமிருந்து வந்தது. அவன் இதைக் கவனித்தான். இரண்டு குழந்தைகள் ஒரு பொருளின்மீது ஆசை வைக்கின்றன. ஒன்று அதைப் பெற்று
...more
Jeevarathinam liked this