தூக்கம் ஒவ்வோர் உயிருக்கும் இன்றியமையாதது. எத்தனை சிந்தனைகளை அது மூடி வைக்கிறது! நிரந்தரத் தூக்கத்துக்காகத் தற்கொலையை நாடுபவர்கள், ஒன்றும் புரியாதவர்களல்ல. உளைச்சல் பட்ட மனத்தோடு, உறக்கம் இல்லாமல் திரிபவனைக் காட்டிலும், அமைதிக்காகச் சாகிறவன் அறிவாளிதான். அமைதியை வாழ்நாளிலே கண்டுபிடித்துக்கொள்ள முடியாத கோழையாக அவன் இருக்கலாம். ஆனால் சாவின் மூலம் அதைத் தேடிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஒளியைப் பெற்ற அறிவாளி அல்லவா அவன்!