More on this book
Kindle Notes & Highlights
எதிர்காலத்தைப் பற்றிய கனவுகளில் ஆழ்ந்தான். அந்தக் கனவு, அவனை ஒரு மாளிகையில் வைத்திருக்கும் நேரத்தில், நிகழ்காலம் ஒரு தடியின் உருவத்தில் அவன் தலையில் தட்டிற்று. விழித்துப் பார்த்தான். ஒரு போலீஸ்காரர் நின்று கொண்டிருந்தார்.
தூக்கம் ஒவ்வோர் உயிருக்கும் இன்றியமையாதது. எத்தனை சிந்தனைகளை அது மூடி வைக்கிறது! நிரந்தரத் தூக்கத்துக்காகத் தற்கொலையை நாடுபவர்கள், ஒன்றும் புரியாதவர்களல்ல. உளைச்சல் பட்ட மனத்தோடு, உறக்கம் இல்லாமல் திரிபவனைக் காட்டிலும், அமைதிக்காகச் சாகிறவன் அறிவாளிதான். அமைதியை வாழ்நாளிலே கண்டுபிடித்துக்கொள்ள முடியாத கோழையாக அவன் இருக்கலாம். ஆனால் சாவின் மூலம் அதைத் தேடிக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை ஒளியைப் பெற்ற அறிவாளி அல்லவா அவன்!
நீரோட்டம் போலத் தாவி வரும் வார்த்தைகள், வரிக்கு வரி அழகான உவமைகள், புதிய புதிய சொல்லாட்சி, தமிழ் இலக்கணத்திற்கே அப்பாற்பட்ட புதிய ‘பாணி’கள்...
அந்த பூமியிலே சராசரி மனிதனிலும் சாதாரண மனிதனாகத் தானிருக்கக் காண்பான்.
கம்பனின் இராமகாதை, புறநானூறு, கலித்தொகை, முத்தொள்ளாயிரம் என ஒவ்வொன்றிலும் சில பாடல்களை மனனம் செய்து கொண்டான். பொருள் விளங்காமலேயே அவை மனதில் பதிந்தன. பிற்காலத்தில்தான் பல கவிதைகளுக்கு அவன் பொருள் விளங்கிக் கொண்டான்.
அவர்தான் கருணாநிதி என்கிற பெயரை முதலில் அவனுக்கு அறிமுகப்படுத்தினார். கருணாநிதியின் வசனங்களைப் பற்றி, அவனிடம் அடிக்கடி சொல்லுவார்.
‘அபிமன்யு’ படத்தில் அவன் கேட்ட தமிழ், என்றும் மறக்க முடியாத இன்பத் தமிழாகும். “ஒடிந்த வாளானாலும் ஒரு வாள் கொடுங்கள்” “அண்ணன் செய்த முடிவைக் கண்ணன் மாற்றுவதற்கில்லை.” “கண்ணன் மனமும் கல் மனமா?”
ஒரு நாளல்ல... ஆறு நாட்கள் சேர்ந்தாற்போல அந்தப் படத்தை அவன் பார்த்தான். ‘அம்பிகா தியேட்ட’ரின் சுவையான காப்பியும், ‘அபிமன்யு’வில் கண்ட கருணாநிதியின் கை வண்ணமும் அவன் நெஞ்சிலே நிலைத்தன. “காணாமலே காதல்” என்பார்கள். அந்தக் ‘காதலே’பிறந்துவிட்டது அவனுக்குக் கருணாநிதியின் மீது...!
அன்று கருணாநிதியை அவன் முதன்முதலாகக் “கோயம்புத்தூர் லாட்ஜில்” சந்தித்ததும், ஒரு காதலியைக் காணும் உணர்ச்சியே அவனுக்கு ஏற்பட்டது.
மனிதனுடைய திறமை பெரிதல்ல; கிடைக்கின்ற சந்தர்ப்பமே அவனைப் பிரகாசிக்கச் செய்கின்றது.
எல்லோராலும் கவனிக்கப்படுகிற மனிதனைவிட, யாராலும் கவனிக்கப்படாதவன் அமைதியாகவே வாழ்கிறான்.
அவன் சந்தர்ப்பங்களால் உருட்டிச் செல்லப்படும் பந்தாக மாறினான்.
அவனது ஆலயவாசம் முடிந்தது. வனவாசம் தொடங்கிற்று.
குப்பைகளை வாரிக்கொட்டும் வேகத்தில் குப்பைகளுக்கு நடுவே விழுந்துவிட்ட தங்கத்தையும் வாரிக்கொட்டுவது போல், களையெடுக்கும் வேகத்தில் பயிரையும் எடுத்து விடுவதுபோல், கண்ணில் விழுந்த தூசியை எடுக்க நீளும் கைகள் கண்ணையே எடுக்கும் தன்மைபோல்,
பாசம் வைத்த பொருள் பறிபோனால் வருகின்ற துயரம் அவனுக்கு வந்தது.
குடும்பக் கவலை இல்லாதவனுக்கும் உணவைப் பெரிதாகக் கருதாதவனுக்கும் சிறைச்சாலையை விட இனிமையான சொர்க்கம் கிடையாது. வெளி உலகத்தின் பரபரப்பு அங்கே இல்லை. அமைதியான சிந்தனைகள் அங்கே பூத்துக்குலுங்குகின்றன.
“ஒன்று நடந்துதான் தீருமென்றால் அதிலே கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது...?” என்ற மராட்டிய ஆசிரியன் ‘காட்கரியின்’ பொன்மொழி அவனுக்குநினைவிற்கு வந்தது.
மனது களங்கமில்லாதிருந்தால் வாழ்க்கையில் வரும் துயரங்கள் தானாகவே விலகிவிடும் என்பதுதான் அது. எப்போது விலகும்...? எப்படி விலகும்...? அதெல்லாம் தெரியாது. விலகும்! அது மட்டும் நிச்சயம்...!
சமுத்திரத்திலே நிறைய நீர் இருந்தாலும், சக்கரவாகப் பட்சிபனித்துளியைத்தான் நாடுகிறது. தினசரி
நீலங்கரைத்த வானிலே, கோலங் குழைத்து வந்திருக்கிறது வெண்ணிலா! அது நடந்து வந்த வேளையில் விழுந்து விட்ட வைரங்கள் பொறுக்குவாரில்லாமல் கிடக்கின்றன.
இரவு நீங்கள் கண்டீர்களே! அதுதான் உலகம். அதுதான் உண்மையான உலகம்... பகல் வெறும் கனவு! நீங்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தினசரி வரும் கனவு! கனவைப் பொறுமையோடு போக விடுங்கள்! மாலை வரட்டும்... ஆகா! மாலை வரட்டும்... மீண்டும் தென்றல் வரும்... வரும்... வரும்... தடையில்லாமல் வந்துகொண்டேயிருக்கும்.
முரசியம்பின; முருடதிர்ந்தன; முறை எழுந்தன பணிலம்; வெண்குடை அரசெழுந்ததோர் படியெழுந்தன; வகலுண் ‘மங்கல அணி’ எழுந்தது!
“சாலியொருமீன் தகையாளைக் கோவலன் மாமுது பார்ப்பான் மறை வழி காட்டிடத் தீவலம் செய்வது காண்பார்...”
“நறுமலர்க் கோதை நின் நலம் பாராட்டுநர் மறுவின் மங்கல அணியே யன்றியும் பிறிதணி அணியப் பெற்றதை யெவன்கொல்?”
“அஞ்செஞ் சீறடி அணிசிலம் பொழிய கொங்கை முன்றிற் குங்குமம் எழுதாள் மங்கல அணியிற் பிறிதணி மகிழாள்”
இளங்கோவடிகளின் ஒரு வரியை நண்பர் விட்டுவிட்டார். அந்த வரியைச் சொன்னால் எங்கே ஆபாசம் என்று மற்றவர்கள் கூறிவிடுவார்களோ என்ற பயத்தில் இளங்கோவடிகளைக் காப்பாற்ற ஆசைப்பட்டு, விட்டுவிட்டார் போலும்! தோழர் பயப்பட வேண்டியதில்லை. இந்த இடத்தில் அந்த வரி வருவது இலக்கியத்துக்குப் புறம்பும் அல்ல; ஆபாசமும் அல்ல, மேலும் இது மனிதக்கதை. அந்த வரி இதுதான்; “மென்துகில் அல்குல் மேகலை நீங்க...” மறைவிடத்தே மேகலை அணிதலும் ஒழிந்தாள் என்பது
“மங்கல அணியிற் பிறிதணி மகிழாள் கொடுங்குழை துறந்து வடிந்துவீழ் காதினாள்! திங்கள் வாண்முகம் சிறுவியர் பிரியச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப் பவள வாணுதல் திலகம் இழப்பத் தவள வாணகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி...”
“கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன்; நிற்றலும் இலனெனக் கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்து...”
“நான்கு கால் இருப்பதால் ஆடு; ஒரு வாலிருப்பதால் மாடு” என்கிற மாதிரி, வாதத்துக்கு வலிந்து பொருள் கொள்ளலாம்.
“புலிப்பற் றாலிப் புன்றலைச் சிறாஅர்...”
“கோடி உடுத்தி மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான்”
பல்லாயிரம் பாடல்களில் தமிழ்த் தேனைப் பிசைந்து கொடுத்த அந்த மகாகவி ஓர் இளங்கவிஞனின் குறும்புக்கு ஆளானான். வானளாவி நிற்கும் கோபுரத்தின் மீது கல் எறிந்து விளையாடும் சிறுவன்போல் அவன்
பாட்டு எழுதிச் சம்பாதித்த பணம் எல்லாம் பேப்பர் கொடுத்தவர்களுக்கும் பிளாக் செய்தவர்களுக்கும் போகத் தொடங்கிற்று. இது அவன் பிறப்போடு வந்த விதி-எதுவும் அவன் கையில் தங்கக்கூடாது என்பதே இயற்கை வகுத்த சட்டம்-ஆனாலும் அவன் மனம் தளரவில்லை.
கானல் நீரிலே விண்மீனை வேட்டையாடுவதுபோல்,
மந்திரவாதியிடம் நம்பிக்கை வைத்த மலடியைப்போல்-
வாழ்க்கையில் ஒருவனுக்குத் திட்டமில்லாமல்போனால்- அவனது எல்லா அனுபவங்களும் கசப்பாக இருக்கும் என்பதற்கு அவன் உதாரணம். தெளிவில்லாதமனம் அலை பாய்வதினால் ஏற்படும் குழப்பம்-அவனுக்கே சொந்தமான ஒன்று.
ஆனால் அந்த நிலையிலும் பனித்துளியைத் தேடிப்பிடிக்கும் சக்கரவாகப் பட்சிபோல்-பயனுள்ள இலக்கியங்களைப் படிக்கத் தவறவில்லை.
சாதாரண காலத்துக்கே அந்தப் பேச்சுப் பொருந்தாது என்றால் தேர்தல் காலத்தில் எப்படிப் பொருந்தும்?
கணையாழியும் கசப்பும்
அண்ணாத்துரை அவனுக்கு இழைத்த தீமைகளை விட-அவன் தனக்கே இழைத்துக்கொண்ட பெருந்தீமை- ‘கவலை இல்லாத மனிதன்’ என்ற தலைப்பில் மூன்றாவது படம் எடுத்ததாகும்.
1960 செப்டம்பர் மாதத்தில் படம் வெளியானபோது அவனைப் பெரும் கடன்காரனாக நிறுத்தின. அன்றையக் கணக்குப்படி ஐந்து லட்சத்துத் தொண்ணூறு ஆயிரம் ரூபாய்க்கு அவன் கடன்காரனாய் ஆகியிருந்தான். பின் நாளில் அது வட்டியேறி ஏழு லட்சமாகப்
அரசியலில் அண்ணாத்துரையும் அவரது ஜாதி வெறியும் தன்னை ஒதுக்குவதை எண்ணிக் கலங்கினான். எல்லாத் துன்பங்களும் ஒரே நேரத்தில் வந்து சேர்ந்தன.
அவன் இந்த முடிவை விரும்பவில்லை. இந்த முடிவு அவனை விரும்புகிறது.