மலையர்களின் தெய்வங்களும் காட்டில் அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றன. காடு தன் பசுமையுடனும் ஈரத்துடனும் விரிந்திருக்கையில் மேலே ஒரு விண்ணுலகிற்கான தேவையே இல்லை. விண்ணுலகைப் படைத்தவர்கள் ஊர்களின் இருண்ட இடுங்கிய நாற்றமும் புழுக்கமும் மிக்க வீடுகளில் ஒடுங்கி வாழும் மனிதர்கள்.