யார் யாரைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? என்னைப் புரிந்துகொள் என்னைப் புரிந்துகொள் என்று மன்றாடு கிறார்கள். யார் மனதிலாவது அவர்கள் அன்றி பிறர் இருக்கிறார்களா? தெரியவில்லை. ஒன்றுமே கூறமுடியவில்லை. மனிதர்களைப் பற்றி திட்டவட்டமாக ஏதேனும் சொல்லக்கூடிய அளவுக்கு முதிர்ந்த மனிதர் யாரேனும் உண்டா இந்த பிரபஞ்சத்தில்?