காடு [Kaadu]
Rate it:
12%
Flag icon
ஆளுயரக் காட்டுச் சேம்புச் செடிகள் யானைக் காதுகள்போல செம்புள்ளிகள் பரவிய இலைகளை அசைத்தபடி
12%
Flag icon
வலதுகைப் பழக்கம் உள்ளவர்கள் வலதுகைப் பக்கமாகத்தான் எப்போதும் திரும்பு கிறார்கள்.
16%
Flag icon
கிண்ணம் களவாண்டவன மாதிரி ஒரு பம்மல்,
19%
Flag icon
பைத்தியம் என்பது இதே போல பிறர் கண்ணுக்குத் தெரியாத ஒரு காட்டுக்குள் சென்று விடுவதுதானா?
25%
Flag icon
அனுபவம் அது முடிந்த பிறகு சாதாரணமாக ஆகிவிடுகிறது. ஆனால் அது நிகழும் கணங்களில் அப்படியே முழுப்பிரக்ஞையையும் சுழற்றியடிக்கும் பிரவாகமாகவும் கொந்தளிப்பாகவும் இருக்கிறது.
25%
Flag icon
அனுபவங்களை எதிர்கொள்ள அறிவு
25%
Flag icon
எவ்வகையிலும் உதவுவதில்லை என்று
25%
Flag icon
அதற்குள் பலமுறை அறிந் த...
This highlight has been truncated due to consecutive passage length restrictions.
28%
Flag icon
ஏமானுக்கு பிடிச்சது, சாமி நெனைச்சு மடியில விளுந்தா
28%
Flag icon
உண்டு... ஆனா அதில ஒண்ணும் வலிய காரியமில்லை. கிட்டி னாலும் கிட்டல்லேண்ணாலும் கணக்கு செரிதேன். ஏமானுக்கு நல்ல சொப்பனமுண்டுல்லா. வேற என்ன வேணும்...”
28%
Flag icon
“ஏன் கெட்டினா ஒத்திக்கோ பாட்டத்துக்கோ எடுத்திருக்கா? போவும்வேய்...”
32%
Flag icon
எப்படி இந்த வரிகள் நினைவிலிருந்து வருகின்றன. இந்த வரிகளின் உணர்வுகளை அவற்றை வாசிக்கும்போது அடையாளம் கண்டுகொண்டதேயில்லை.
35%
Flag icon
அற்பனும் அபத்தமானவனுமான மனிதன் என்ற பிராணிக்கு சற்றும் தேவையில்லாத ஆடம்பரம்.
35%
Flag icon
வானமற்ற இடத்தில்தான் அவனால் நான் நான் என்று சதா நினைத்தபடி திளைத்து வாழமுடியும் என்பதனால்தான்.
38%
Flag icon
பிடிக்காத காரியத்தை செய்யணுமானா அது சில்லறை காரிய மில்லை. குமட்டும்பம் சாப்பிடச் சொல்லுயது மாதிரியாக்கும் அது. ஆனா ஆரும் ஒண்ணும் சொல்லமுடியாது
49%
Flag icon
இறந்தபிறகு அம்மா வளர ஆரம்பித்தாள், உடலுக்குள் ஒரு கட்டிபோல.
51%
Flag icon
மனுஷ உடல்ல இருந்து மலம் போறது மாதிரி மனசில இருந்தும் போகணும்போல இருக்கு.
56%
Flag icon
அதெப்பிடி ஏட்டக் கண்டா எருமமாடு திங்கல்லா வரும்?
58%
Flag icon
சொந்த தம்பி முன்னேறினா விட்டுப்போடுவானா? கேஸு போட்டு சீரழிப்பான்.
59%
Flag icon
பெண்ணோட காமத்தைப் பயப்படற ஆணோட கோழைத்தனம்தான்.
59%
Flag icon
“நிறையப் படி. படிக்கிறத விடாதே. அதைவிட உனக்கு எழுத்து முக்கியம்னா, அதுக்காக வேற எதையாவது விடணும்னு பட்டா, தயங்காம விட்டுரு. அதுக்கான தைரியம் உனக்கு வேணும்.”
66%
Flag icon
படுத்தபோது தான் உடம்பு எத்தனை களைப்பாக இருக்கிறது என்று தெரிந்தது. தொடைச் சதைகள், குதிகால் சதைகள், முதுகெலும்பு கொக்கிகள், தோள் பட்டைகள் இதமான தினவுடன்
66%
Flag icon
தங்கள் இணைப்புகளை இலகுவாக்கி நெகிழ்ந்து படுக்கையில் படிந்தன.
67%
Flag icon
இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்.
68%
Flag icon
இருபக்கமும் அசைந்து அசைந்து சென்றது.
72%
Flag icon
கௌங்கு முழுங்கின நரி விக்கினதுமாதிரி ஒரு பாஷை.
72%
Flag icon
மனியன் பதினைஞ்சு மைலு ஓடுவான், நடப்பான். ஆனா பத்து மினிட்டு நேரா நின்னுகிடமாட்டான்.
79%
Flag icon
விவேகம் உள்ள ஆம்பிள பெண் பேச்சு கேப்பான். அவ தடுக்குத காரியத்துக்கு துணியமாட்டான்.
79%
Flag icon
அவர்கள் கண்களுக்கு நாடார் அடக்கம் செய்யப்படக் காத்திருக்கும் சடலம் மட்டும்தான்.
83%
Flag icon
துக்கங்களில சீக்கிரம் மறக்குத துக்கம் மரணம்தான்னு அப்பன் சொல்லியதுண்டு”
86%
Flag icon
மலையர்களின் தெய்வங்களும் காட்டில் அவர்களுடன் சேர்ந்து வாழ்கின்றன. காடு தன் பசுமையுடனும் ஈரத்துடனும் விரிந்திருக்கையில் மேலே ஒரு விண்ணுலகிற்கான தேவையே இல்லை. விண்ணுலகைப் படைத்தவர்கள் ஊர்களின் இருண்ட இடுங்கிய நாற்றமும் புழுக்கமும் மிக்க வீடுகளில் ஒடுங்கி வாழும் மனிதர்கள்.
89%
Flag icon
உங்களில் எளிய வருக்கு நீங்கள் செய்யும் நன்மை எனக்குச் செய்ததாகும் என்னாக்கும் ஆண்டவரு சொன்னது.”
92%
Flag icon
வேலையும் வருமானமும் இல்லாதவன் வீட்டில் இருக்க முடியாது.
93%
Flag icon
ஒரு வருடத்திற்குள் இந்த வாழ்வில் ஆரம்பத்திலிருந்த கூச்சமும் தன்னிரக்கமும் எல்லாம் விலகி ஒரு சுவாதீனம் கூடிவிட்டது.
93%
Flag icon
ஒரு கட்டத்தில் நான் மிக மகிழ்ச்சியாக இருப்பதாக உணர்ந்தேன். வேறு ஒரு வாழ்க்கைக்குப் போவது பற்றி சிந்திப்பதே சிரமமாக இருந்தது. ஒரு கவலையும் இல்லை.
94%
Flag icon
யார் யாரைப் புரிந்துகொண்டிருக்கிறார்கள்? என்னைப் புரிந்துகொள் என்னைப் புரிந்துகொள் என்று மன்றாடு கிறார்கள். யார் மனதிலாவது அவர்கள் அன்றி பிறர் இருக்கிறார்களா? தெரியவில்லை. ஒன்றுமே கூறமுடியவில்லை. மனிதர்களைப் பற்றி திட்டவட்டமாக ஏதேனும் சொல்லக்கூடிய அளவுக்கு முதிர்ந்த மனிதர் யாரேனும் உண்டா இந்த பிரபஞ்சத்தில்?
95%
Flag icon
மலையன்னு ஒரு சாதி இருந்ததுன்னு சொல்றாங்களே நிஜம்மான்னு எங்கிட்ட கேட்டான். எனக்கு அக்கறையில்லைன்னுட்டேன். ஒரு பக்கம் காட்டை வெட்டி அழிக்கிறது, மறு பக்கம் எதெல்லாம் அழிஞ்சதுன்னு கணக் கெடுக்கிறது. உங்க பைத்தியக்காரத்தனத்தில எனக்கு பங்கு இல்லை, நான் வேற மாதிரி பைத்தியக்காரன்னேன்.”
95%
Flag icon
“எல்லாரும் செய்ற தப்புதான். அகங்காரம். உன்னைப் பத்தியே நினைக்கிறது. மத்தவங்க உன்னை பேணணும்னு நினைக்கிறது.”
96%
Flag icon
எஞ்சினியர்களை கான்ட்ராக்டர்கள் ஏன் தெய்வமெனக் கும்பிடுகிறார்கள் என்று புரிந்தது.