யூ நோ ஐ யம் நாட் எ டிரங்கார்ட். நான் ரசிகன். மதுவை குடிக்கிறது பாதி, முகந்து பாக்கிறது பாதி. அதன் ஆவி மூக்கில ஏறி, மனசில எறங்கி, ஆத்மாவில வெளை யாடணும். அங்க தூங்கிக் கிடக்கிற பிசாசுகளும் தேவதைகளும் வந்தாச்சுடா நேரம்னு எறங்கி வரணும். குடிச்சிட்டு வாந்தி எடுக்கிறவன் அந்த குடியோட தேவதைய அவமரியாதை பண்றான். குடிச்சிட்டு விழுந்து கிடக்கிற முட்டாளுக்கு குடியப் பத்தி ஒரு மயிரும் தெரியாது. விழுந்து கிடக்கிறதுக்கு என்ன இழவுக்கு குடிக்கணும்? பாறையில மண்டய முட்டினா போதாதா?”