சாத்தானை பரீட்சிக்கப்பிடாது. சாத்தானிட்ட யுத்தம் செய்யப்பிடாது. அதாக்கும் நான் கண்ட சத்தியம். சாத்தானைக் கண்டா அப்பம் ஓடிப்பிடணும். ஓடினா அவனால நம்மை பிடிக்க முடியாது. அதாக்கும் பழைய ஓதேசிமார் ஒரு இடத்தில் நிக்கமாட்டாவ. கெட்டிக் கிடக்குத வெள்ளம்தான் நாறும். ஓடும் வெள்ளம் கெங்கையாக்கும். கெங்கைக்கு பங்க மில்லை.’ நாடார் தேற்றினார்.