More on this book
Community
Kindle Notes & Highlights
இங்க எப்பிடியும் ஆயிரம் வகை பழங்கள் இருக்கு. அதுமாதிரி காய்கள் கெழங்குகள். அவ்ளோத்தயும் தின்னு பாக்கணுமானா யானையா மாறணும். யானையா மாறினாக்கூட நாம திங்காத காய்தான் ஜாஸ்தியா இருக்கும். பத்து பழம் தின்னா மனசு அடங்கும்கிறியா? திங்காத பழத்துக்காக ஏங்கி ஏங்கி திங்கிற பழம் ருசியே தெரியாமப் போயிடும். அதான் மனுஷனோட மனசு.
Sugan liked this
யூ நோ ஐ யம் நாட் எ டிரங்கார்ட். நான் ரசிகன். மதுவை குடிக்கிறது பாதி, முகந்து பாக்கிறது பாதி. அதன் ஆவி மூக்கில ஏறி, மனசில எறங்கி, ஆத்மாவில வெளை யாடணும். அங்க தூங்கிக் கிடக்கிற பிசாசுகளும் தேவதைகளும் வந்தாச்சுடா நேரம்னு எறங்கி வரணும். குடிச்சிட்டு வாந்தி எடுக்கிறவன் அந்த குடியோட தேவதைய அவமரியாதை பண்றான். குடிச்சிட்டு விழுந்து கிடக்கிற முட்டாளுக்கு குடியப் பத்தி ஒரு மயிரும் தெரியாது. விழுந்து கிடக்கிறதுக்கு என்ன இழவுக்கு குடிக்கணும்? பாறையில மண்டய முட்டினா போதாதா?”
சென்றவை ஒருபோதும் மீள்வதில்லை. தாண்டிச் சென்ற படியே இருத்தலை, இழந்தபடியே இருத்தலையே வாழ்க்கை என்கிறோம்.
உன் நினைவென ஓயாது பெய்துகொண்டிருக்கிறது மழை. இம்மண்ணிலுள்ள அனைத்தையும் ஈரமாக்கி விட்டாய். புதைந்து கிடந்த விதைகளை எல்லாம் முளைத்தெழச் செய்துவிட்டாய். எல்லா இடைவெளிகளையும் நிரப்பி வழிகிறாய். எல்லாவற்றையும் கழுவிக் கழுவி நீ ஓய்ந்தாய். புத்தம் புதியதாக நான் விரிந்து எழ புதிய வெயிலொளிபோல மென்மையாக என் மீது படர்கிறாய். உன் பெயர் என்னில் ஒருகோடித் துளிகளில் சுடர்விடுகிறது. உன்னை நிசப்த மாகப் பிரதிபலித்தபடி வியந்து கிடப்பதே என் கடனென்று உணர் கிறேன். உன் மகத்துவங்களுக்கு சாட்சியாவதெற்கென்றே படைக்கப் பட்டிருக்கிறேன். உன் மௌனத்தால் அடித்தளமிடப்பட்டிருக் கின்றன என் உரையாடல்கள் அனைத்தும். உன்னுடைய அசைவற்ற
...more
சாத்தானை பரீட்சிக்கப்பிடாது. சாத்தானிட்ட யுத்தம் செய்யப்பிடாது. அதாக்கும் நான் கண்ட சத்தியம். சாத்தானைக் கண்டா அப்பம் ஓடிப்பிடணும். ஓடினா அவனால நம்மை பிடிக்க முடியாது. அதாக்கும் பழைய ஓதேசிமார் ஒரு இடத்தில் நிக்கமாட்டாவ. கெட்டிக் கிடக்குத வெள்ளம்தான் நாறும். ஓடும் வெள்ளம் கெங்கையாக்கும். கெங்கைக்கு பங்க மில்லை.’ நாடார் தேற்றினார்.