ஆனால் ஊடகங்களின் வாயை அடைத்த கருணாநிதியால் சுப்ரமணியன் சுவாமியின் வாயை அடைக்க முடியவில்லை.அவர் வெளியிட்ட உரையாடல் பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கச் செய்தியாக வெளியானது. சுப்ரமணியன் சுவாமி இதை வெளியிட்டதால், கருணாநிதி கலங்கித்தான் போனார்.ஏற்கெனவே 1989ல் சுப்ரமணியன் சுவாமி எழுப்பிய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற புகாரால், தனது ஆட்சியைப் பறிகொடுத்தவர் கருணாநிதி.இன்று வரை, சுப்ரமணியன் சுவாமி என்றாலே கருணாநிதிக்குப் பயம்தான்.