More on this book
Community
Kindle Notes & Highlights
Read between
February 10 - February 16, 2021
அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையைப் பற்றி தெரியாமல் இருந்ததால் பலர், ஜெயலலிதாவும், சசிகலாவும் ஏராளமாக சொத்து சேர்த்தது பற்றி புகார் எடுத்து வருவார்கள்.அவர்களிடம் நைச்சியமாகப் பேசி டிஎஸ்பி திருப்பியனுப்பிவிடுவார். 1994 மற்றும் 1995ம் ஆண்டுகளில் ஜெயலலிதாமீதான மக்களின் வெறுப்பு வேக வேகமாக வளர்ந்தது.
இருந்தார்.கூட்டத்தில் ஆற்காடு வீராச்சாமி, தா.கிருஷ்ணன், துரைமுருகன் போன்ற மூத்த அமைச்சர்கள் இருந்திருக்கின்றனர். கூட்டம் தொடங்கியதுமே கருணாநிதி இயக்குநர் கணபதியைப் பார்த்து, ‘என்னய்யா சொல்றாரு உங்க எஸ்பி, சார்ஜ் ஷீட் போட முடியுமா முடியாதா? அந்த அம்மா ஆட்சிக்கு வந்துடும்னு எல்லாரும் பயப்பட்றீங்களா? சார்ஜ் ஷீட் போடச் சொன்னா போட வேண்டியதுதானே... போலீஸ்ல பொய் கேஸே போட்டது இல்லையா ? என்னய்யா நெனச்சிக்கிட்டு இருக்கீங்க
ராதாகிருஷ்ணன் மற்றும் நரேந்திர பால் சிங் ஆகியோரின் பிள்ளைகளுக்கு சீட் வழங்கப்பட்டிருப்பதும், அவர்கள் மிக மிகக் குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருப்பதும் தெரிய வந்தது. நரேந்திர பால் சிங்கின் மகள் குர்பானி சிங் கம்ப்யூட்டர் சயின்ஸ் என்ஜினியரிங் பிரிவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்ந்திருந்தார்.அவரின் கட் ஆஃப் மதிப்பெண் 300க்கு 229.44.ராதாகிருஷ்ணனின் மகன் சந்தீப் எலக்ட்ரானிக்ஸ் அன்ட் கம்யூனிகேஷன் பிரிவில் சேர்ந்திருந்தார். அவர் பெற்ற கட் ஆஃப் மதிப்பெண் 300க்கு 188.31.அந்த ஆண்டு பழங்குடியின பிரிவினருக்கான கட் ஆஃப் என்ன தெரியுமா ? 244.11. இருப்பதிலேயே குறைந்த கட் ஆஃப் மதிப்பெண் பழங்குடி
...more
எந்த அளவுக்கு கருணாநிதி ஜாபர் சேட்டை நம்பினார் என்றால் மனைவி ராஜாத்தி அம்மாளின் தொலைபேசியையே ஒட்டுக் கேட்குமாறு ஜாபர் சேட்டுக்கு அவர் உத்தரவிட்டார்.அப்படி ஒட்டுக் கேட்டபோது கருணாநிதி அறிந்து கொண்ட தகவல்களால், பத்து நாட்களுக்கு மேல், ராஜாத்தி அம்மாளின் சிஐடி காலனி இல்லத்துக்கே செல்லாமல் தவிர்த்தார் கருணாநிதி.பிறர்
விசாரணை ஆணையம் என்பதே அப்போதைய பரபரப்பை மூடி மறைப்பதற்காக மட்டுமே. இந்தியாவில் பெரும்பான்மையான விசாரணை ஆணையங்கள் இந்த நோக்கத்துக்காகவே நடத்தப்படுகின்றன.
கருணாநிதியிடம் தனக்கு இருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி தனக்காக சந்தை விலையைவிட மிக மிக குறைவான விலைக்கு ஒரு வீட்டு மனையைப் பெற்றார்.தனது பெயரில் அந்த வீட்டு மனையைப் பெறாமல், அவர் மகள் சமூக சேவகர் என்று சான்றிதழ் அளித்து மகள் பெயரில் மனையைப் பெற்றார்.இதே
ஆனால் ஊடகங்களின் வாயை அடைத்த கருணாநிதியால் சுப்ரமணியன் சுவாமியின் வாயை அடைக்க முடியவில்லை.அவர் வெளியிட்ட உரையாடல் பெரும்பாலான நாளிதழ்களில் முதல் பக்கச் செய்தியாக வெளியானது. சுப்ரமணியன் சுவாமி இதை வெளியிட்டதால், கருணாநிதி கலங்கித்தான் போனார்.ஏற்கெனவே 1989ல் சுப்ரமணியன் சுவாமி எழுப்பிய விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்ற புகாரால், தனது ஆட்சியைப் பறிகொடுத்தவர் கருணாநிதி.இன்று வரை, சுப்ரமணியன் சுவாமி என்றாலே கருணாநிதிக்குப் பயம்தான்.