திராவிடர் கழகத்தில் நாடக ஆசிரியர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய அனைவரும் இருந்தனர். அனைத்துவகையான இலக்கியவாதிகளும் அதில் அங்கம் வகித்தனர். மேடை நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் எனப் பலரும் தங்கள் எழுத்துத் திறமையையும் பேச்சுத் திறமையையும் வைத்துக் கட்சிக்குள் தங்களுக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க முயன்றனர். சினிமா அப்போது வளர்ந்து வந்த ஒரு புதிய ஊடகம். சினிமாவும் திராவிடக் கட்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்தன. ஒன்றின் வளர்ச்சிக்கு இன்னொன்று பாடுபட்டன. தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த ஒரு வியக்கத்தக்க நிகழ்வு இது.