பெண்களைப் படிக்கவைக்கிறோம். உலக அறிவைப் புகட்டுகிறோம். ஆனால், திருமணம் என்று வரும்போது, நாம் சொல்வதற்கெல்லாம் அவர்கள் தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவள் கணவன் என்னதான் புரிதல் உடையவனாக இருந்தாலும் முதலிரவில் அவளை வெறும் போகப்பொருளாகத்தான் பார்க்கிறான். இதுவே உண்மை. அதனால், சொந்தமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு பெண்ணால் இந்தச் சம்பிரதாயங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது.