More on this book
Community
Kindle Notes & Highlights
பெண்களைப் படிக்கவைக்கிறோம். உலக அறிவைப் புகட்டுகிறோம். ஆனால், திருமணம் என்று வரும்போது, நாம் சொல்வதற்கெல்லாம் அவர்கள் தலையாட்டவேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். அவள் கணவன் என்னதான் புரிதல் உடையவனாக இருந்தாலும் முதலிரவில் அவளை வெறும் போகப்பொருளாகத்தான் பார்க்கிறான். இதுவே உண்மை. அதனால், சொந்தமாகச் சிந்திக்கக்கூடிய ஒரு பெண்ணால் இந்தச் சம்பிரதாயங்களை எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாது.
மனிதநேயம் என்பது பாசிட்டிவான விஷயம். சில பிரச்னைகள் நடந்துவிட்டன. நம் வாழ்க்கை பாதிக்கப்பட்டுவிட்டது. ஆனால், அடுத்த நாள் நல்லதாகவே விடியும். வாழ்க்கைச் சக்கரம் சுற்றிக்கொண்டே இருக்கும். நாம் தேடினால், உலகில் நம்பிக்கை எங்கும் நிறைந்திருப்பதைக் கண்டுகொள்ளலாம்.
திராவிடர் கழகத்தில் நாடக ஆசிரியர்கள், பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் ஆகிய அனைவரும் இருந்தனர். அனைத்துவகையான இலக்கியவாதிகளும் அதில் அங்கம் வகித்தனர். மேடை நாடகக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள் எனப் பலரும் தங்கள் எழுத்துத் திறமையையும் பேச்சுத் திறமையையும் வைத்துக் கட்சிக்குள் தங்களுக்கென ஒரு நிரந்தர இடத்தைப் பிடிக்க முயன்றனர். சினிமா அப்போது வளர்ந்து வந்த ஒரு புதிய ஊடகம். சினிமாவும் திராவிடக் கட்சியும் ஒன்றோடு ஒன்று இணைந்து வளர்ந்தன. ஒன்றின் வளர்ச்சிக்கு இன்னொன்று பாடுபட்டன. தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த ஒரு வியக்கத்தக்க நிகழ்வு இது.
புனிதமான உறவு என்று எதுவும் கிடையாது. சம்பிரதாயங்கள் தங்களைக் கட்டுப்படுத்துவதை யாரும் விரும்பமாட்டார்கள். அதுவும் கடைசி வாய்ப்பை யாரும் தவறவிட மாட்டார்கள்.