சாதியின் அடிப்படைத் தத்துவம் வேறு; வர்ணத்தின், அடிப்படைத் தத்துவம் வேறு. இவை வேறானவை என்பது மட்டுமின்றி ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. வர்ணம், தகைமையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியானால், தகைமையால் அன்றி பிறப்பினால் மட்டும் சமூகத்தில் உயர்ந்த இடம் பெற்றுள்ளவர்கள் எப்படி அந்த இடத்தை விட்டு விலகச் செய்வீர்கள்? பிறப்பால் தாழ்ந்த இடத்தில் உள்ளவர், தகைமையால் உயர்ந்த இடத்துக்கு உரியவரானால், அந்த உயர்வை மக்கள் எவ்வாறு ஒப்புக்கொள்ளச் செய்வீர்கள்? எனவே வர்ணமுறை அமைப்பை நிறுவ வேண்டுமானால் முதலில் சாதி அமைப்பை உடைக்க வேண்டும்.

