சாதிமுறை இனக் கலப்பைத் தடுக்கவோ, இரத்தத் தூய்மையைக் காப்பதற்கோ உருவானதன்று. உண்மையில் பார்க்கப் போனால், இந்திய இனங்கள் தமக்குள் இரத்தத்தாலும், கலாச்சாரத்தாலும் இரண்டறக் கலந்ததற்கு நெடுங்காலத்திற்குப் பின்னர் தான் சாதிமுறை நடைமுறைக்கு வந்தது. சாதி பாகுபாடு என்பது உண்மையில் இனப் பாகுபாடே என்பதும், பல்வேறு சாதிகளும் வெவ்வேறான இனங்களே என்பதும் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகும்.

