சாதியைப் பற்றி ஆராய வந்தவர்கள் புரிந்த பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில் வழி தவறியுள்ளனர் என்பேன். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது எனத் தேவைக்கு மேலாக வலியுறுத்தியுள்ளனர். அவர்களே நிற வேற்றுமைகளுக்கு ஆளானவர்கள்; இதன் விளைவாகச் சாதிச் சிக்கலுக்குத் தலையாய காரணம் நிறமே என எளிதாகக் கற்பனை செய்து கொண்டனர். ஆனால் உண்மை இதுவல்ல.

