இந்து சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சமுதாயம் பிற சமுதாயங்களைப் போலவே பல வர்க்கங்களைக் கொண்டிருந்தது. அவ்வாறு அமைந்த பண்டைய வர்க்கங்களாவன: 1.பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம் 2.சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம் 3.வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் 4.சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம். இந்தப் பகுப்பு முறைகளை நன்கு கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தம் தகுதிக்கேற்ப பிரிதொரு வர்க்கத்தினராக மாறமுடியும்.

