இந்தியாவில் சாதிகள் : Indiyaavil Saathikal (Political Book 2) (Tamil Edition)
Rate it:
2%
Flag icon
பண்பாட்டு ஒருமைப்பாட்டினால் இணைந்துள்ள இந்திய தீபகற்பத்திற்கு இணையாக ஒப்பிட்டுக் கூறக்கூடிய அளவுக்கு வேறு எந்த நாடும் இல்லை என்று துணிந்து கூறுவேன்.
6%
Flag icon
பழங்காலத்துப் பழக்கவழக்கங்களில் எச்சமாக மிஞ்சியவற்றுள் ஒன்றான புறமண வழக்கம் தொடக்ககாலச் சமுதாயங்களில் பரவலாக நிலவியது என்னும் உண்மை நீங்கள் யாவரும் நன்கறிந்ததாகும். புறமண வழக்கம் காலப்போக்கில் தன் தெம்பையும் திறனையும் இழந்தது.
19%
Flag icon
இந்து சமுதாயத்தை எடுத்துக் கொள்வோம். இந்தச் சமுதாயம் பிற சமுதாயங்களைப் போலவே பல வர்க்கங்களைக் கொண்டிருந்தது. அவ்வாறு அமைந்த பண்டைய வர்க்கங்களாவன: 1.பிராமணர்கள் அல்லது புரோகித வர்க்கம் 2.சத்திரியர்கள் அல்லது இராணுவ வர்க்கம் 3.வைசியர்கள் அல்லது வணிக வர்க்கம் 4.சூத்திரர்கள் அல்லது கைவினைஞரும் ஏவலருமான வர்க்கம். இந்தப் பகுப்பு முறைகளை நன்கு கவனிக்க வேண்டும். இந்த அமைப்பில் ஒரு வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் தம் தகுதிக்கேற்ப பிரிதொரு வர்க்கத்தினராக மாறமுடியும்.
19%
Flag icon
இன்றைய எண்ணிலடங்கா பல்வகை சாதிகளை உருவாக்கியவை தொடக்க காலக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமுமே ஆகும்.
25%
Flag icon
சாதியைப் பற்றி ஆராய வந்தவர்கள் புரிந்த பல்வேறு தவறுகளால் அவர்களின் ஆய்வுப் போக்கில் வழி தவறியுள்ளனர் என்பேன். ஐரோப்பிய ஆராய்ச்சியாளர்கள் சாதி அமைவதற்கு நிறம் பெரும் பங்கு வகிக்கிறது எனத் தேவைக்கு மேலாக வலியுறுத்தியுள்ளனர். அவர்களே நிற வேற்றுமைகளுக்கு ஆளானவர்கள்; இதன் விளைவாகச் சாதிச் சிக்கலுக்குத் தலையாய காரணம் நிறமே என எளிதாகக் கற்பனை செய்து கொண்டனர். ஆனால் உண்மை இதுவல்ல.
25%
Flag icon
“எல்லா இளவரசர்களும் - ஆரிய இனத்தவர் எனப்படுபவராயினும் சரி, திராவிட இனத்தவர் எனப்படுபவராயினும் சரி அவர்கள் ஆரியர்களே.
55%
Flag icon
சாதிமுறை இனக் கலப்பைத் தடுக்கவோ, இரத்தத் தூய்மையைக் காப்பதற்கோ உருவானதன்று. உண்மையில் பார்க்கப் போனால், இந்திய இனங்கள் தமக்குள் இரத்தத்தாலும், கலாச்சாரத்தாலும் இரண்டறக் கலந்ததற்கு நெடுங்காலத்திற்குப் பின்னர் தான் சாதிமுறை நடைமுறைக்கு வந்தது. சாதி பாகுபாடு என்பது உண்மையில் இனப் பாகுபாடே என்பதும், பல்வேறு சாதிகளும் வெவ்வேறான இனங்களே என்பதும் உண்மைகளைத் திரித்துக் கூறுவதாகும்.
Jayaprakash
Aryan invasion theory fails here
71%
Flag icon
சாதியின் அடிப்படைத் தத்துவம் வேறு; வர்ணத்தின், அடிப்படைத் தத்துவம் வேறு. இவை வேறானவை என்பது மட்டுமின்றி ஒன்றுக்கொன்று நேர் எதிரானவை. வர்ணம், தகைமையை அடிப்படையாகக் கொண்டது. அப்படியானால், தகைமையால் அன்றி பிறப்பினால் மட்டும் சமூகத்தில் உயர்ந்த இடம் பெற்றுள்ளவர்கள் எப்படி அந்த இடத்தை விட்டு விலகச் செய்வீர்கள்? பிறப்பால் தாழ்ந்த இடத்தில் உள்ளவர், தகைமையால் உயர்ந்த இடத்துக்கு உரியவரானால், அந்த உயர்வை மக்கள் எவ்வாறு ஒப்புக்கொள்ளச் செய்வீர்கள்? எனவே வர்ணமுறை அமைப்பை நிறுவ வேண்டுமானால் முதலில் சாதி அமைப்பை உடைக்க வேண்டும்.
83%
Flag icon
சாஸ்திரங்களை இலக்கணப்படி வாசித்து தர்க்கரீதியான முறையில் பொருள் கொண்டால் அவற்றின் அர்த்தம் நாம் நினைப்பதுபோல இல்லை என்று விளக்கிக் கொண்டிருப்பது பயனற்றது. சாஸ்திரங்களை மக்கள் எப்படிப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.
84%
Flag icon
குறிக்கோளை அறிந்து கொள்வதைவிட அதை அடையும் வழிமுறைகளை அறிவது அதிக முக்கியம்