உலகின் மற்றநாடுகளில் சமூகப்புரட்சிகள் நடந்துள்ளன. இந்தியாவில் ஏன் அப்படி நடக்கவில்லை என்பதுபற்றி நான் மிகவும் சிந்தித்திருக்கிறேன். கொடுமைகள் நிறைந்த சதுர்வர்ண அமைப்பு, கீழ்வகுப்புகளைச் சேர்ந்த இந்துக்களை நேரடி நடவடிக்கையில் இறங்குவதற்கு முற்றிலும் சக்தியற்றவர்களாகச் செய்து விட்டது என்பதுதான் இந்த கேள்விக்குக் கிடைக்கும் ஒரே விடை.

