ஒரு சாதி தனக்கு மேலே உள்ள இன்னொரு சாதியுடன் சமபந்தி போஜனமும் கலப்பு மணமும் செய்யத் தனக்கு உரிமை உண்டு என்று கூறினால், உடனே விஷமக்காரர்கள் குறுக்கிட்டு, அப்படியானால் அந்தச் சாதி தனக்குக் கீழே உள்ள மற்றச் சாதிகள் தன்னுடன் சமபந்திபோஜனமும் கலப்புமணமும் செய்ய அனுமதிக்க வேண்டியிருக்கும் என்று கூறுகிறார்கள். இப்படி விஷமம் செய்வோரில் பலர் பிராமணர்கள்.

