இந்து சமூகம் பெண்கள் ஆசிரியைகளாகவும், பாரிஸ்டர்களாகவும் பணிபுரிவதை ஏற்கப் பழகிவிட்டது. பெண்கள் சாராயம் காய்ச்சுவோராகவும் கசாப்புக்காரர்களாகவும் பணிபுரிவதையும் கூட ஏற்கப் பழகிக் கொள்ளக் கூடும். ஆனால் பெண்கள் புரோகிதர்களாகவும் போர் வீரர்களாகவும் வருவதை இந்து சமூகம் ஏற்கும் என்று சொல்வதற்கு மிகுந்த துணிச்சல் வேண்டும்.

