இதை மதம் என்று நினைக்கும் வரை அதை மாற்ற இணங்க மாட்டார்கள். ஏனென்றால் மதம் என்பது பொதுவாக மாற்றத்துக்கு உரியதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் சட்டம் என்பது மாற்றப்படக் கூடியது. ஆகவே மதம் என்று தாங்கள் நினைப்பது உண்மையில் பழசாகிப் போன சட்டம்தான் என்று மக்கள் தெரிந்து கொண்டால், அதில் மாற்றம் செய்வதற்கு அவர்கள் தயாராயிருப்பார்கள்.

