இப்படிப் பார்க்கும்போது முகமதியர், சீக்கியர், கிறிஸ்தவர் ஆகிய இந்து அல்லாதவர்களிடையே உள்ள சாதிமுறை இந்துக்களின் சாதிமுறையிலிருந்து அடிப்படையிலேயே வேறுபட்டிருப்பதைக் காணலாம். முதலாவதாக, இந்துக்களிடையே ஒற்றுமை உணர்வுப் பிணைப்புகள் இல்லை; ஆனால் இந்து அல்லாதவர்களிடையே இந்தப் பிணைப்புகள் பல உள்ளன. ஒரு சமூகம் பலம் வாய்ந்ததாக இருப்பது, அதில் உள்ள பல்வேறு குழுக்களும் தொடர்பு கொள்வதற்கும் கலந்துறவாடுவதற்கும் உள்ள வாய்ப்புக்களைப் பொறுத்து இருக்கிறது.

