மாபெரும் மனிதனால் உருவாக்கப்படுவதே வரலாறு என்ற தத்துவத்தை நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும், ஒவ்வொரு நாட்டிலும் அறிவுத் திறன் கொண்ட வகுப்புதான் ஆளும் வகுப்பாக இல்லையென்றாலும், மிகுந்த செல்வாக்குக் கொண்ட வகுப்பாக இருக்கிறது என்பதை நீங்கள் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

