சாஸ்திரங்களைப் புறக்கணித்தால் மட்டும் போதாது. அவற்றின் அதிகாரத்தையே மறுக்க வேண்டும். புத்தரும் நானக்கும் செய்தது அதுதான். சாதி புனிதமானது என்ற எண்ணத்தை மக்கள் மனத்தில் பதிய வைத்திருக்கும் மதம்தான் எல்லாக் கேட்டுக்கும் மூலகாரணம் என்று இந்துக்களிடம் கூறவேண்டும். இதற்கு உங்களுக்குத் தைரியம் இருக்குமா?

