ஒரு மகாத்மாவின் விஷயம் விதிவிலக்காகும். அதைவிட்டால், ஒரு தலைவர் தமது சாதிக்காரராக இருந்தால்தான் ஒரு இந்து அவரைப் பின்பற்றுவார். ஒரு தலைவர் பிராமணராயிருந்தால்தான் பிராமணர் அவரைப் பின்பற்றுவார். காயஸ்தராயிருந்தால்தான் காயஸ்தர் பின்பற்றுவார். இவ்வாறேதான் ஒவ்வொரு சாதியினரும் செய்வார்கள். தன்னுடைய சாதியைச் சேராத ஒருவரின் திறமையைப் போற்றும் பண்பு ஒரு இந்துவிடமும் இல்லை. உயர்ந்த ஒழுக்கம் உடையவர் தமது சாதியினராயிருந்தால்தான் அவரைப் பாராட்டுவார். இது இனக்குழுக் குணமாகும். “அவர் செய்தது தப்போ, சரியோ, அவர் என் சாதிக்காரர்; அவர் நல்லவரோ, கெட்டவரோ, அவர் என் சாதிக்காரர்” என்ற மனப்பான்மைதான் காணப்படுகிறது.
...more

