சாதிக்கோட்டையில் உடைப்பு ஏற்படுத்த வேண்டும் என்றால் நீங்கள் வேதங்களையும் சாஸ்திரங்களையுமே வெடிவைத்துத் தகர்க்க வேண்டும். பகுத்தறிவு செயல்பட இடம் கொடுக்காத, ஒழுக்கம் செயல்பட இடம்கொடுக்காத வேதங்களையும் சாஸ்திரங்களையுமே நீங்கள் தகர்க்கவேண்டும். ஸ்ருதிகளையும் ஸ்மிருதிகளையும் அடிப்படையாகக் கொண்ட மதத்தை நீங்கள் அழிக்கவேண்டும். வேறு எதுவும் பயன் தராது. இந்த விஷயத்தில் இதுதான் என்னுடைய தீர்க்கமான முடிவு.

