ஒருகாலகட்டத்தில் கைம்பெண் மறுமணத்தைப் பதேரி பிரபு சாதியினர் தம் சாதி வழக்கமாகக் கொண்டிருந்தனர். பிராமணசாதியில் கைம்பெண் மறுமண வழக்கம் இல்லை என்ற குறிப்பான காரணத்தால் பிற்காலத்தில் பதேரி பிரபு சாதியில் சிலர் கைம்பெண் மறுமணம் இழிவான ஒரு சமுதாய நிலையின் அடையாளம் எனக் கருதத் தொடங்கினர். தங்கள் சாதியின் சமூக அந்தஸ்தை உயர்த்தும் நோக்கத்துடன் அதுவரையில் அவர்களிடையே வழக்கில் இருந்த கைம்பெண் மறுமண வழக்கத்தைக் கைவிடச் சில பதேரி பிரபுக்கள் முனைந்தனர். இந்த முயற்சி அவர்கள் சாதிக்குள்ளேயே பிளவை உண்டாக்கியது. ஒரு பிரிவினர் கைம்பெண் மறுமணத்தை ஆதரித்தனர்; பிறர் அதனை எதிர்த்தனர். பேஷ்வாக்கள் கைம்பெண்
...more

