இந்த இரு சமூகத்தாரும் ஒருசமயம் தங்கள் சமூக அந்தஸ்தை உயர்த்திக் கொள்ள விரும்பி, பிராமணர்களின் பழக்கவழக்கங்களையும் வழிமுறைகளையும் பின்பற்றத் தொடங்கினர். சோனார்கள், ‘தைவந்த்ய பிராமணர்கள்’ என்று தங்களை அழைத்துக் கொண்டு அதற்கேற்ப நடந்து கொண்டனர். வேட்டியை பஞ்ச கச்சமாகக் கட்டிக்கொண்டு, வணக்கம் என்று சொல்வதற்குப் பதிலாக ‘நமஸ்கார்’ என்ற சொல்லைப் பயன்படுத்தினர். பஞ்ச கச்சமும் நமஸ்காரம் என்று சொல்லுதலும் பிராமணர்களுக்கு உரியது. எனவே, சோனார்கள் தங்கள் போக்கைப் பின்பற்றித் தங்களைப் போல் பவனி வருவதைப் பிராமணர்கள் விரும்பவில்லை. ஆகவே, பிராமணப் பழக்கவழக்கங்களைப் பின்பற்றி சோனார்கள் மேற்கொண்ட முயற்சியை
...more

