சாதியை ஒழிக்கும் இயக்கத்தில் பிராமணர்கள் முன்நின்று நடத்த முன் வருவார்களா, மாட்டார்களா என்பது முக்கியமில்லாத விஷயம் என்று உங்களில் சிலர் கூறுவார்கள். இவ்வாறு நினைப்பது, ஒரு சமுதாயத்தில் அறிவுயர்ந்த வகுப்பின பணியின் முக்கியத்துவத்தை அலட்சியப்படுத்துவதாகும்.

