அறிவியல் வழியைப் பின்பற்றிச் செல்லவேண்டிய இவ்விடத்தில் உணர்ச்சிவயப்படுதலைத் தவிர்த்து, நடுநிலையில் நின்று சீர்தூக்கிப் பார்த்தல் வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் என்னுடைய தத்துவங்கள் தவறு என்று தெரிந்தால் நான் அவற்றை அழித்து விடவும் ஆர்வம் காட்டத் தயங்க மாட்டேன்.

